முன்னாள் நீதவான் ஒருவருக்கு விளக்கமறியல்




களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதவான் திரு.  RPJ  ரஞ்சித் குமார் அவர்களை, மே மாதம் 4ம் திகதி வரை (இன்றிலிருந்து 14 நாட்களுக்கு), விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி கெளரவ நீதவான் திரு. பிரதீபன் கட்டளையிட்டார்.

இவருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி  பொலிசார், பொதுச் சொத்துக்களை கையாடல் செய்த வழக்கில் சந்தேக நபராக உட்படுத்தி,  களுவாஞ்சிக்குடி  நீதிமன்றத்தில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்திருந்தனர்.

இன்றைய தினம், நகர்வு மனு ஒன்றின் மூலமாக, திரு. ரஞ்சித் குமார், ஆஜராகிய போதே, அவர் விளக்கமறியலில் வைக்கபட்டார்.

 நீதிச்சேவை ஆணைக்குழு 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் இவரை இடைநிறுத்தி இருந்தது