டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்



இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நுளம்பு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நுளம்பு ஒழிப்பு செயற்பாடுகளுக்கு இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட குழுவினரின் உதவியை பெறவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ப்ரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் காரணமாக வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 24,562 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.