அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் ஜனாதிபதி



அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இன்று (19) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உறவினர்களின் உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான எந்தவிதமான உறுதிமொழியும் வழங்கப்பட்டதாகத தெரியவில்லை.
அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி, சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, பிரதி சட்டமா அதிபர், துணை சட்டமா அதிபர், பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசியல் கைதிகளின் தரப்பில், உண்ணாவிரதமிருக்கும் மதியரசன் துலக்‌ஷனின் தாயாரும் மாமியாரும், கணேசன் தர்ஷனின் தாயாரும் சகோதரரும், இராசதுரை திருவருளின் மனைவியும் ஆகியோரோடு, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், சிவன் அறக்கட்டளையின் நிறுவுநர் கணேஸ்வரன் வேலாயுதம், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் கே. சதீஸ் என 9 பேர் கலந்துகொண்டனர்