கொலைக் குற்றத்திற்கு, நசீருக்கு மரண தண்டனை



மனிதக் கொலை ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

2002ம் ஆண்டு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ இந்த தண்டனையை வழங்கியதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ம் திகதி கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் மனோகரன் இளங்கோவன் என்ற நபரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக மொஹமட் நசீர் என்பவருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். 

அதன்படி குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.