ஹிஸ்புல்லாவிற்கு திடீர் சுகயீனம்



(விஷேட நிருபர்)
மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹவுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர் அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளார் என தெரிய வருகின்றது.
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் தொடர்ந்து ஒரு வாரமாக காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக வட்டார ரீதியான வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை மற்றும் பொது மக்கள் சந்திப்புக்கள் மற்றும் பல் வேறு கூட்டங்கள் என்பவற்றை துரிதமாக நடாத்தி வந்த நிலையில்
ஞாயிற்றுக்கிழமை(15.10.2017) ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு திரும்பியுள்ளார் என தெரிய வருகின்றது.
அல்சர் அதிகரித்ததாலேயே அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கொழும்பு திரும்பியிருப்பதால் வட்டார ரீதியான வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை மற்றும் பொது மக்கள் சந்திப்புக்கள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவரின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து மேலும் தெரிய வருகின்றது.