இலங்கையின் சிறுவர்களுக்கு தரமான கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘செலான் பஹசர’ திட்டத்தின் கீழ், 132ஆவது மற்றும் 133ஆவது நூலகங்கள் நீர் கொழும்பு மற்றும் திருகோணமலையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள புனித. பேதுரு கல்லூரிக்கு தனது 132ஆவது நூலகத்தை அன்பளிப்பு செய்திருந்ததுடன், 3,000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுகூலமளிக்கும் வகையில் இந்த நூலகம் அமைந்துள்ளது.
அதேவேளை, திருகோணமலையில் அமைந்துள்ள புனித. சூசையப்பர் கல்லூரிக்கு தனது 133ஆவது நூலகத்தை வழங்கியிருந்தது. இதில் விசேட சாதனங்களாக மல்டிமீடியா புரொஜெக்டர் ஒன்றும் உள்ளடங்கியிருந்தது. 800க்கும் அதிகமான மாணவர்கள் இந்த நூலகத்தினால் பயன்பெறுவதுடன், வாசிப்போருக்கு பெருமளவு சௌகரியத்தை வழங்கும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment