சர்வதேச சுனாமி விழிப்புணர்வு தினத்தினை முன்னிட்டு தேசிய சுனாமி வேலைத்திட்டத்தின் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. சுனாமி சமிங்ஞ்சை ஒத்திகை நிகழ்வு இன்று (2017/11/05) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு மருதமுனை அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் அருகிலுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் இந்த சுனாமி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
இக் கோபுரத்தில் இருந்து வழங்கப்பட்ட விழிப்புணர்வு எச்சரிக்கையை மக்கள் அவதானித்து (கேட்டு) பதற்றப்படாமல் அதற்கேற்றவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெறுவதற்கு விசேடமாக தெரிவு செய்யப்பட்ட "அனர்த்த முன்னெச்சரிக்கை விசேட குழு "கடின உழைப்பை செய்தது. இந்த குழுவின் தலைவர் நிஷார் எஸ்.எல்.எம்.ஹரீஸ் உட்பட குழுவின் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.
இச் சுனாமி ஒத்திகை பயிற்சி நிகழ்வில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், அனர்த்த முன்னெச்சரிக்கை விசேட குழுவின் தலைவர் நிஷார் எஸ்.எல்.எம்.ஹரீஸ் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.முபீன், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.நஸ்மி உட்பட பொது மக்கள், அரச அலுவலகர்கள், பாதுகாப்பு படையினர் என பலர் கலந்து கொண்டனர்


Post a Comment
Post a Comment