உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரத்துடன் தொடர்புடைய வாகன பேரணிகளுக்கு இன்று முதல் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தடையை மீறி வாகன பேரணிகளை நடத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டவிதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது


Post a Comment
Post a Comment