அக்கரைப்பற்று நீதிபதியினால், கஞ்சா வைத்திருந்த குற்றவாளிக்கு 2 வருட கடுழிய சிறை




#இர்சாத்.
அக்கரைப்பற்றுப் பிரதேசங்களில், கஞ்சா வைத்திருந்து கடந்த காலங்களில், தண்டப் பணம் விதிக்கப்பட்டு, சில தடவைகள் ஒத்திவைக்கப்பட் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டும் வந்து 10 முன் குற்றங்கள் புரிந்த குற்றவாளிக்கு, 02 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிமன்று இன்று தீர்ப்பளித்தது.

அக்கரைப்பற்று 01 இனைச் சேரந்த குறித்த குற்றவாளியான பஸ்மிர், இன்றைய தினமும் அக்கரைப்பற்று நீதிமன்றில் கஞ்சா வைத்திரந்த குற்றத்திற்காக ஆஜரானார். குற்றத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தமது சொந்தப் பாவனைக்கென அதைனை வைத்திருந்தாதாகவும்,தமக்கு திருந்தி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் தமது சட்டத்தரணிகள் ஊடாக மன்றுரை செய்தார்.

இவரது சார்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணத்தை அடுத்து, அக்கரைப்பற்று நீதிபதி திரு பீற்றர் போல் ”கடந்த காலங்களில் 10 தடவைகள், இவருக்கு சில தடைவைகள் கஞ்சா வைத்திருந்தமை, விற்பனை தொடர்பில் நீதிமன்றின் முன் பொலிசார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அப்பேற்பட்ட சந்தரப்பங்களிலெல்லாம், இவர் திருந்தி வாழ வேண்டுமென்ற நோக்குடன், புனரவாழ்வு  பெற்று வாழவேண்டுமெனற டிப்படையில்  இவரது கருணை மனுக்களை ஏற்றுக்கொண்டு , ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையினை விதித்திருந்திருந்ததது.அதனையும் பொருட்படுத்தாது, உதாசீனப்படுத்தி, தான் மட்டுமல்ல தான் வாழ்ந்து வரும் சமூகத்திற்கும் பாதிப்பு எற்படும் விதத்தில் புதிய குற்றத்துடன் மன்றின் முன் வந்து முன்வைக்கும் மன்றாட்டத்தை நீதிமன்று மறுப்பதாகத் தெரிவித்தார"

2018/02/05 இலிருந்து அமுலிற்கு வரும் வகையில் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு குற்றவாளிக்கு, அக்கரைப்பற்று நீதவான் கௌரவ பீற்றர் போல் கடூழிய சிறைத் தண்டனையை விதித்தார்.