‘அமைச்சுப் பதவிகளைத் தேடிச் சென்றவர்கள் பூட்​டி வைக்கப்பட்டுள்ளனர்’

அமைச்சுப் பதவிகளைக் ​கேட்டுக்கொண்டு, எம்மிடமிருந்துச் சென்றவர்கள் அங்குமிங்கும் பாய முடியாதளவு அமைச்சரவைக்குள் வைத்து மூடப்பட்டுள்ளனரென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது அமைச்சுப் பதவி கிடைக்காதவர்கள் ஜனாதிபதியைத் திட்டுவதற்கு முன்னர் பாருங்கள் அமைச்சர்கள் தெரிவுக்காக அனுப்பப்பட்ட பட்டியலில் தம்முடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என்று அப்போது உண்மையைத் தெரிந்துக்கொள்ள முடியம் என்றார்.
அமைச்சர் பதவிகளைத் தேடிச் சென்றவர்களை ரணில் அமைச்சரவைக்குள் வைத்து பூட்டியுள்ளார் அங்குமிங்கும் செல்ல முடியாத வகையில் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.


--- Advertisment ---