”சாதிக்க வேண்டுமென்ற சிந்தனை, தேசியநிலைக்கு வித்திட்டது”-சம்மாந்துறை றிசா மொகமட்


விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் சாதிக்கவேண்டுமென்ற வெறி என்னுள்
இருந்தது. அதனால் கடும் ஆசையுடன் படித்தேன். பலத்த
எதிர்பார்ப்புமிருந்தது. ஆதலால் இன்றைய தேசியநிலை கிடைத்தது. முதலில்
இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

இவ்வாறு நேற்று வெளியான க.பொ.த உயர்தரபரீட்சைமுடிவின்படி அகிலஇலங்கை
ரீதியில் தொழினுட்பத்துறையில் தேசியரீதியில் 2ஆம் இடத்தைப் பெற்ற
சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரி மாணவன் மொகைடீன் பாவா றிசா மொகமட்
கூறினார்.

பரீட்சை முடிவு வெளியானதும் குறித்த சாதனை மாணவனைச்சந்தித்து வினவியபோது
மேற்கண்டவாறு கூறினார்.

றீசா மொகமட் உயிரியில் தொழினுட்பத்துறையில் 3ஏ பெற்று 2.91 இசட்
புள்ளியைப்பெற்று தேசியரீதியில் 2ஆம் இடத்தையும் அம்பாறை மாவட்டத்தில்
முதலிடத்தையும் பெற்றார்.
கூடவே கல்லூரி அதிபர் முத்து இஸ்மாயிலும் இருந்தார்.


அவர் மேலும் கூறுகையில்;
நான் சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்தவன். எனினும் படிப்பிற்கு எந்த
தடையும் இருக்கவில்லை. என்போன்ற விவசாய குடும்பத்தில் பிறந்த
மாணவர்களுக்கு நான் ஒரு முன்னுதாரணம். என்போன்று  படித்து நீங்களும்
தேசிய சாதனை படைக்கவேண்டும்.

நான் ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை அறபா வித்தியாலயத்திலும் பின்னர்
முஸ்லிம் தேசிய கல்லூரியிலும் பயின்றேன். என்னைக்கற்பித்த ஆசிரியர்கள்
அதிபர் முத்து இஸ்மாயில் சேர் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றிகூறுகிறேன்.
என்றார்.


--- Advertisment ---