புத்தாண்டு உறுதிமொழியாக உப்பு, சர்க்கரை, எண்ணெயைக் குறையுங்கள்! உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரை

பிறக்கப்போகும் 2019-ம் ஆண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில உறுதிமொழிகளை எடுக்கலாம் என்று பரிந்துரைப்பதுடன் அவற்றைப் பட்டியலிட்டுள்ளது உலகச் சுகாதார நிறுவனம்.

புத்தாண்டு ஒவ்வொருமுறை பிறக்கும்போதும் புதுப்புது உறுதிமொழிகளை எடுப்பதும், அவற்றை அடுத்த சில நாள்களிலேயே காற்றில் பறக்கவிட்டுவிடுவதும் வாடிக்கையான ஒன்று. இந்த வேடிக்கைக்கு நடுவே, `இந்தப் புத்தாண்டில் நான் எந்த உறுதிமொழியும் எடுக்கப்போவதில்லை' என்று பலர் விளையாட்டாகச் சொல்வதுண்டு. பிறக்கப்போகும் 2019-ம் ஆண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில உறுதிமொழிகளை எடுக்கலாம் என்று பரிந்துரைப்பதுடன் அவற்றைப் பட்டியலிட்டுள்ளது உலகச் சுகாதார நிறுவனம். உணவு வகைகள்

 நம்முடைய உடல் அமைப்பைக் கண்டறிவது மிகவும் கடினமான ஒன்று. நமது உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் ஒரு உணவால் கிடைப்பதல்ல. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுக்கும் பல்வேறு மகத்துவங்கள் உள்ளன. எனவே, பல்வேறு உணவு வகைகளைக் கலந்து உண்ண வேண்டும். பால், கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் அசைவ உணவுகளான இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றைத் தினமும் அல்லது வாரத்துக்கு மூன்று நாளாவது சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. எந்த உணவையும் வறுத்துச் சாப்பிடாமல் வேகவைத்துச் சாப்பிடலாம். இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த பண்டங்களைத் தவிர்த்து பச்சைக் காய்கறிகள், நட்ஸ் மற்றும் பழங்களை நொறுக்குத்தீனிகளாகச் சாப்பிடலாம். 


--- Advertisment ---