#ஜனாசா ; காத்தான்குடி இளைஞர் அத்தீப் விபத்தில் உயிரிழப்பு

மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இரண்டு மோட்டர் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்ததில் மூவர் உயிரிழந்தள்ளனர். 

வேப்பவுஸ் வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 22 வயதுடைய மோகன் மயூரன், வேப்பவுஸ் 3 ம் குறுக்கு வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 23 வயதுடைய முருகுப்பிள்ளை பவித்திரன்,காத்தான்குடி-2 ஐ சேர்ந்த அத்தீப் (20) எனும் இளைஞர் உயிரிழந்துள்னர்


நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். 


வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களை சமாந்தரமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது இரு மோட்டர் சைக்கிள்களும் விபத்துக்கள்ளான நிலையில் பின்னால் வந்த மோட்டர் சைக்கிளில் வந்த இருவரும் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


இந்த நிலையில் இரு மோட்டர்சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்ததில் அதில் ஒருவர் தீப்பற்றி உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


--- Advertisment ---