மலிங்கா நோபோலாக வீசியதை நடுவர் கவனிக்க மறந்த நடுவர்


ஐபிஎல் 2019 சீசனில் பெங்களூரில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின இந்த போட்டியில் மும்பை அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடைசி பந்தை மலிங்கா நோ பாலாக வீசியதை நடுவர் கவனிக்க மறந்ததையடுத்து போட்டி முடிந்த பிறகு கோலி நடுவரின் முடிவை கடுமையாக சாடினார்.

''நாங்கள் ஒன்றும் கிளப் கிரிக்கெட் விளையாடவில்லை. ஐபிஎல் லெவலில் விளையாடிக்கொண்டிருக்கிறோம். கடைசி பந்து குறித்த நடுவரின் முடிவு அபத்தமானது, ஆட்டத்தில் வெற்றி யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம் என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான சூழலில் இங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் மிகவும் கூர்மையாக கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்'' என கோலி கூறியிருக்கிறார்.

பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத போட்டியாக நேற்றைய போட்டி அமைந்தது. யுவராஜ் சிங்கின் ஹாட்ரிக் சிக்ஸர்கள், ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி ரன் குவிப்பு, சாஹலின் சிறப்பான பந்துவீச்சு, விராட் கோலியின் அற்புதமான பௌண்டரிகள், டி வில்லியர்ஸின் இமாலய சிக்ஸர்கள், பும்ராவின் நெறுக்கிப் பிடிக்கும் யார்க்கர்கள், மலிங்காவின் கட்டுக்கோப்பான இறுதி ஓவர் பந்துவீச்சு, அம்பயரின் கவனமின்மை என நிமிடத்திற்கு நிமிடம் ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்த போட்டியாக அமைந்தது.

நேற்று நடந்தது என்ன?
டாஸ் வென்ற விராட் கோலி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் குயின்டன் டீ காக் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். ஏழாவது ஓவரில் சாஹலின் பந்துவீச்சில் குயின்டன் டீ காக் ஆட்டமிழந்தார். மும்பை அணியின் அணித்தலைவர் ரோகித் ஷர்மா 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.

அதன்பின்னர் யுவராஜ் சிங் அதிரடியாக மூன்று சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசிவிட்டு சாஹல் பந்தில் அவுட் ஆனார். சூரியகுமார் யாதவ் தன் பங்குக்கு 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் கடைசி மூன்று ஓவர்களில் 40 ரன்கள் குவித்தது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் இரண்டு பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் விளாசித் தள்ளி 32 ரன்கள் சேர்த்தார்.

பெங்களூரு அணி தரப்பில் சாஹல் மட்டும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர். உமேஷ் யாதவ், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.





சாஹல்படத்தின் காப்புரிமைCHAHAL TWITTER ACCOUNT
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 187 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆரம்பத்தில் இருந்தே ரன் ரேட்டை கவனத்தில் கொண்டு விளையாடியது. மொயின் அலி வழக்கத்துக்கு மாறாக தொடக்க வீரராக களமிறங்கினர்.

ஏழு பந்தில் ஒரு பௌண்டரி ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி தொடர்ச்சியாக பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டிக்கொண்டு இருந்தார். மறுமுனையில் பார்தீவ் படேல் 22 பந்துகளில் நான்கு பௌண்டரி ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து மார்கண்டே பந்தில் வீழ்ந்தார்.

இதன் பின்னர் நட்சத்திர வீரர் ஏ பி டி வில்லியர்ஸ் களமிறங்கினார். அவரை க்ரூனால் பாண்டியா திணறடித்தார். ஆரம்ப சில பந்துகளில் டி வில்லியர்ஸ் பந்தை சரியாக கணித்து ஆட சிரமப்பட்டார். டி வில்லையர்ஸை அவர் களமிறங்கியபோதே ஒரு கேட்ச் மூலம் அவுட்டாக்கும் வாய்ப்பு யுவராஜுக்கு இருந்தது. ஆனால் அவர் தவறவிட்டார்.

ஐ.பி.எல்: பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமான சிறு தவறு
ஐபிஎல் 2019: டெல்லியை வீழ்த்திய சென்னை – வெற்றியில் பெரும் பங்காற்றிய வாட்சன், ப்ராவோ
சுழற்பந்தை எதிர்கொள்வதில் முதல் பத்து பதினோரு பந்துகளில் சிரமப்பட்ட டி வில்லியர்ஸ் ஆட்டத்தின் 11 வது ஓவரில் மார்கண்டேவின் ஓவரில் ஒரு சிக்ஸர் விளாசிய பிறகு தெம்புடன் அடுத்தடுத்த பந்துகளை எதிர்கொண்டார்.

டி வில்லியர்ஸ் களத்தில் தனது முழுமையான திறனை வெளிப்படுத்துவதற்குள் பும்ராவின் பந்தில் கோலி, ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அப்போது 14 ஒவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு.

அடுத்த இரண்டு ஓவர்களில் டி வில்லியர்ஸின் அதிரடி சிக்ஸர்களால் 31 ரன்கள் குவித்தது பெங்களூரு. குறிப்பாக மலிங்காவின் 17-வது ஓவரில் தான் எதிர்கொண்ட மூன்று பந்துகளில் ஒன்றை பௌண்டரிக்கும் இரண்டு பந்துகளை சிக்சருக்கும் விரட்டினார் டி வில்லியர்ஸ்.





டி வில்லியர்ஸ்படத்தின் காப்புரிமைTWITTER
Image caption
டி வில்லியர்ஸ்
கடைசி 4 ஓவர்களில் பெங்களூருவின் வெற்றிக்கு 41 ரன்களே தேவைப்பட்டது.

17-வது ஓவரை பும்ரா வீசினார். வெறும் ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

ஆனால் ஹர்திக் பாண்ட்யாவின் 18 வது ஓவரை டி வில்லியர்ஸ் சிறப்பாக கையாள பெங்களூரு அணி 18 ரன்களை எடுத்தது.

இப்போது வெற்றிக்கு தேவை இரண்டு ஓவர்களில் 22 ரன்கள்.

19-வது ஓவரில் பும்ரா ஒரு விக்கெட்டை கைப்பற்றி ஐந்து ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

ஆட்டத்தின் இறுதி ஓவரில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.

மலிங்காவின் முதல் பந்தை எதிர்கொண்ட ஷிவம் துபே சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை கிட்டத்தட்ட யார்க்கராக வீசினார் மலிங்கா. டி வில்லியர்சால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. நான்காவது பந்தில் ஒரு ரன் எடுத்தார் துபே. ஐந்தாவது பந்தில் டி வில்லியர்ஸ் எவ்வளவு முயன்றும் ஒரு ரன் மட்டுமே வந்தது. கடைசி பந்தை எதிர்கொண்ட ஷிவம் துபே ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.

நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸுக்கு கடைசி ஓவரில் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தின் முடிவில் அவர் 41 பந்துகளில் நான்கு பௌண்டரி ஆறு சிக்ஸர்கள் உதவியுடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டி வில்லியர்ஸ் சேஸிங்கில் ஆட்டமிழக்காமல் இருந்து பெங்களூரு அணி தோற்பது இதுவே முதல் முறை.





ரோகித் ஷர்மாபடத்தின் காப்புரிமைAFP
Image caption
ரோகித் ஷர்மா
'நோ பால்'
பெங்களூரு அணிக்கு கடைசி பந்தில் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா நோ பால் வீசியது டிவி ரீபிளேவில் தெளிவாக தெரிந்தது. ஆனால் அம்பயர் கவனிக்கவில்லை. ஒருவேளை அந்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டிருந்தால் பெங்களூருக்கு வெற்றி பெற மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கக்கூடும்.

கடைசி ஓவரின் மலிங்கா 10 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலி நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த நிலையில் ஒரு பந்தை வைடு கொடுத்தது தொடர்பாக எதிரணி வீரர் ரோகித் ஷர்மாவும் போட்டி முடிந்தபிறகு தன்பேச்சில் குறிப்பிட்டார்.

கோலி வெளிப்படையாக நடுவரின் முடிவை சாடியது இன்றைய தினம் முக்கிய விவகாரமாக உருவெடுக்கக்கூடும்