ஏர்பவர் வயர்லெஸ் மின்சாரம் ஏற்றும் கருவி தயாரிப்பை கைவிட்டது ஆ

ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக மேற்கொள்ளாத ஒரு நடவடிக்கையாக, சரியாக இயங்காது என்பதால், வயர்லெஸ் ஏர்பவர் கருவியின் தயாரிப்பை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பல கருவிகளுக்கு இணைப்பு வழங்கி மின்சாரம் ஏற்றப்படுவதற்கு பதிலாக, இந்த ஏர்பவர் கருவியின் மூலம் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்துகொள்வதற்கு திட்டப்பணிகளை தொடங்கியதாக 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
"ஆனால், பெரும் முயற்சிகளுக்கு பின்னர், ஆப்பிள் நிறுவனத்தின் உயர் தரத்தை ஏர்பவர் எட்ட முடியாது என்பதால், இந்த பணித்திட்டத்தை கைவிட்டுள்ளோம்" என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலதிக விவரங்களை இந்த நிறுவனம் வழங்கவில்லை.
2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த கருவி தயாரிக்கப்படுவது பற்றிய அறிவிப்பு வெளியானவுடன், இது பற்றிய வதந்திகள் வெளியாக வந்தன.
உலக தரத்திலான சிறந்த சார்ஜிங் கருவியை வழங்கும் வாக்குறுதியை அளித்ததோடு, 2018ம் ஆண்டு இந்த கருவி வெளியிடப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான ஹூவாவே மற்றும் சாம்சங் தாங்கள் தயாரிக்கும் கருவிகளுக்கு மின்சாரம் ஏற்றுகின்ற வயர்லெஸ் பொருட்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


--- Advertisment ---