தடை நீக்கம்

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

இதன் அடிப்படையில் பேஸ்புக், வட்சப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்த தடை இலங்கையில் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


--- Advertisment ---