ஜனநயாகத்தைக் காத்த பிரதம நீதியரசர் நளின் பெரோ ஓய்வுக்கு வருகின்றார்

(FilePhoto)
#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இலங்கையின் 46 வது பிரதம நீதியசர்.நளின் ஜெயலத் பெரோ இன்று ஓய்வுக்கு  வருகின்றார். இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின்,எதேச்சதிகார முடிவான பாராளுமன்றை உரிய காலத்திற்கு முன்னர் கலைக்கும் வர்த்தமானி தொடர்பிலான அறிவித்தலானது, சட்ட விரோதமானது என தீர்ப்பு வழங்கி. இலங்கையின் நீதித்துறை இன்னுமும் ஜனாநயகத்தைக் காத்து நிற்கின்றது எனக் கட்டியம் கூறியவர்.

புகழ்பெற்ற நீதியரசர் சான்சோயி இற்குப் பிறது ஆரம்ப நீதிமன்றிலிருந்து மீயுயர் நீதிமன்றம் வரைச் சென்ற ஒரு நீதியரசராக இவர் காணப்படுகின்றார்.

1954ல் பிறந்தவர். சென் தோமஸ் கல்லுாரி கோட்டை, குருத்தலாவ போன்ற இடங்களில் ஆரம்பக் கல்வி பயின்றவர்.1977ல் இலங்கை சட்டக் கல்லுாரியில் இருந்து சட்டத்தரணியாக வெளியேறினார்.கனிஸ்ட சட்டத்தரணியாக சிரேஸ்ட சட்டதரணியான தயா பெரோவிடம்  கனிஸ்ட சட்டத்தரணியாகப் பணிபுரிந்தார்.

1980ம் ஆண்டு காலப் பகுதியில்,ஆரம்ப நீதிமன்ற நீதிபதியாக நீதிச் சேவை ஆணைக் குழுவினால் நியமிக்கப் பட்டார்.1984 முதல் நீதவானாக,கல்கிச, வலஸ்முல்ல, களுத்துறை கொழுபம்பு  போன்ற பகுதிகளில் பணி புரிந்தார்.1990ல் மாவட்ட நீதிபதியானார்.

2001ம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாகி,ரத்னபுர, கண்டி, நுவரெலிய போன்ற பிரதேசங்களில் பணிபுரிந்தார்.மாகாண சிவில் மேன் முறையீட்டு மன்று ஸ்தாபிக்கப்பட்டவேளையில், நியமிக்கப்பட் குடியியியல் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுள் இவரும் ஒருவராவார்.ரத்தபுரியில் இடம்பெற்ற பத்மசிறி திரிமாவிதான கொலை வழக்கில் மேல் நீதிமன்றில் கடமை புரிந்தார்.

2011ம் ஆண்டு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசாக மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.

2016ல் மைத்தரிபால சிறிசேனவினால், உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.இவரது பெயரை 2018ம் ஆண்டு ஒக்டோபரில் அரசியலமைப்புச் சபைக்கு ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதம நீதியரசர் பதவிக்கென அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில், இலங்கையின் 46 வது பிரதம நீதியரசாகும் வாய்ப்பு கிட்டியது.

இவர் பிரதம நீதியரசராகப் பணி புரிந்த காலம் மிகவும் குறுகியது. ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கிய நபராக இவர் கருதப் படுகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை  கடந்த நவம்பர் 9 ஆம் திகதி   2096/70 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது என உயர் நீதிமன்றம் 2019.12.13 ல் தீர்ப்பளித்தது.
பிரதமர் நீதியரசர்  நளின் பெரேரா தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்களே ஏகமனதாக இந்த தீர்ப்பை அறிவித்தனர். ஜனாதிபதியின் குறித்த வர்த்தமானி அறிவித்தலானது, அவரது சட்ட ரீதியிலான அதிகாரங்களுக்கு அப்பால் சென்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதனால் அது சட்ட வலுவற்றது எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்தது. அதனால் அந்த வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்ட தேர்தலுக்கான அறிவிப்பும் வலுவற்றது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், அது தொடர்பில் முன்வைக்கப்பட்ட இடையீட்டு மனுக்கள் தொடர்பில் கடந்த 4,5,6 மற்றும் ஏழாம் திகதிகளில்  சுமார் 28 மணி நேரம் உயர் நீதிமன்றில் முழுமையான விசாரணைகள் இடம்பெற்றன. பிரதம நீதியரசர் நளின் பெரேராவின் கீழ் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் இம்மனுக்கள் விசாரிக்கப்பட்டன.


--- Advertisment ---