தவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது!




தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பு வைத்திருந்த அனைவரும் விசாரிக்கப்படவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
இந்த தாக்குதல்கள் குறித்து எந்த ஒரு தனி சமூகத்தையும் விமர்சிக்க கூடாது. அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டபோதும் இந்நாட்டு முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை.அதனை நாங்கள் மதிக்கிறோம்.
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்புகள் பல கேள்விகளை எழுப்புகிறது.அவர்கள் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் .அடிப்படைவாதம் குறித்து முஸ்லிம் அமைப்புக்கள் பல அரச புலனாய்வுத்துறையிடம் முன்னதாக கூறியிருந்தன.நாங்கள் வடக்கு கிழக்கில் அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்தோம்.ஆனால் கிழக்கு ஆளுநர் அதனை ஹர்த்தால் என்கிறார். அது ஹர்த்தால் இல்லை என நான் தெளிவாக கூறுகிறேன்.
ஜனாதிபதி சட்டம் ஒழுங்கு அமைச்சை வைத்திருக்க முடியாது. இப்போது நடந்துள்ளவைக்கு அவர் பொறுப்புக் கூற வேண்டும் என்றார் சுமந்திரன்