சுற்றுலாத்துறைக்கு 20% அச்சுறுத்தல்


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சுற்றுலாத்துறைக்கு மற்றுமல்லாது நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை சுற்றுலா துறை அபிவிருத்தி தலைவர் கிசு கோமஸ் தெரிவித்துள்ளார். 

சர்வதேச ஊடகங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பாலி, பாரிஸ் மற்றும் நியூஸிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் எமக்கு சில தினங்களுக்குள் மீள கட்டியெழுப்ப முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் எமது இராணுவத்தினரின் கடின செயற்பாடுகளினால் ஓரிரு மாதங்களுக்குள் மீண்டும் பாதுகாப்பான சூழ்நிலைக்கு நாட்டினை வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தாக்குதல்களினால் சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் பொருளாதார தாக்கங்களை கருத்திற்கொண்டால் சுற்றுலாத்துறைக்கு உயர்ந்த பட்சமாக நூற்றுக்கு 20% அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.