பாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்


ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குலின் பின் 36 பாகிஸ்தான் அகதிகள், வவுனியா பூந்தோட்டம் முகாமிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். 

அதில் ஒரு குடும்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல், தனது பொறுப்பில் யாழ்ப்பாணத்திற்கு இன்று அழைத்து வந்துள்ளார். 

தென்னிந்திய திருச்சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த குடும்பத்தினை பொறுப்பேற்றுள்ளதுடன், அவர்களை தனது பொறுப்பில் தங்க வைத்துள்ளார். 

அகதியாக வருகை தந்துள்ள அந்தக் குடும்பத்தினை ஐ.நா பொறுப்பெடுக்கும் வரை தனது பொறுப்பில் தங்க வைத்துள்ளதாக ரட்ணஜீவன் கூல் தொிவித்தார். 

இந்தக் குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி உட்பட 4 குழந்தைகளும் இவ்வாறு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளனர். 

இவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள விடயம் தொடா்பில் சபாநாயகா், பிரதி பொலிஸ் மா அதிபா் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக ரட்ணஜீவன் கூல் மேலும் தொிவித்தார். 

(யாழ். நிருபர் சுமித்தி)