#சச்சின், #லாராவை #பின்னுக்கு தள்ளிய சாதனை நாயகன் #விராட்கோலி; 20,000 ரன்களை கடந்து #சாதனை

கிரிக்கெட்டில் சாதனை மேல் சாதனைகளை படைத்து வருபவர் விராட்கோலி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக குறைந்த போட்டிகளில் 20,000 ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி புதிய சாதனை படைத்துள்ளார். விராட்கோலி இதுவரை 416 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர், 19,963 ரன்கள் எடுத்துள்ளார். அவர் ஒருநாள் போட்டியில் 223 இன்னிங்சில் 11,087 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 131 இன்னிங்சில் 6,613 ரன்களும், 20 ஓவர் போட்டியில் 2,263 ரன்னும் எடுத்து உள்ளார்.

இந்நிலையில் ஐசிசி உலக கோப்பை தொடரில் இன்று மான்செஸ்டரில் நடைபெறும் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணி பலப்பரிட்சை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் 37 ரன்கள் எடுத்த போது விராட்கோலி 417 இன்னிங்சில் 20,000 ரன்கள் கடந்து புதிய சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன் மூலம் அவர் தெண்டுல்கர், லாரா, சாதனையை முறியடித்துள்ளார். சச்சின், லாரா இருவரும் 453 இன்னிங்சில் 20 ஆயிரம் ரன்னை கடந்ததே சாதனையாக இருந்தது. ரிக்கி பாண்டிங் 468 இன்னிங்ஸ் சர்வதேச போட்டியில் 20 ஆயிரம் கடந்தார். மேலும் சர்வதேச போட்டிகளில் 20,000 ரன்களை கடந்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

டாப் 5 இந்திய வீரர்கள்

இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் 782 இன்னிங்சில் 34,357 ரன்களும், ராகுல் டிராவிட் 605 இன்னிங்சில் 24,208 ரன்களும், விராட்கோலி 417 இன்னிங்சில் 20,000 ரன்கள் எடுத்துள்ளார். கங்குலி 488 இன்னிங்சில் 18,575 ரன்களும், வீரேந்திர சேவாக் 443 இன்னிங்சில் 17,253 ரன்களும் எடுத்துள்ளனர். 


--- Advertisment ---