மரண தண்டனை ஒரு போதும் தீர்வாகாது

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த வேண்டாம் என்று இலங்கையிடம் கேட்டுக் கொள்வதாக பிரித்தானியாவின் செல்வந்தனர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரன்சன் தெரிவித்துள்ளார். 

ரிச்சர்ட் பிரன்சன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். 

மரண தண்டனை பேரழிவை தரக்கூடிய அதேவேளை, அது ஒரு போதும் தீர்வாகாது என்று அவர் கூறியுள்ளார். 

இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை மீண்டும் ஒருமுறை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று ரிச்சர்ட் பிரன்சன் தெரிவித்துள்ளார். 

இதேவேளை மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது என்ற இலங்கையின் தீர்மானம் குறித்து கவலை அடைவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. 

பிரித்தானியா வெளியுறவு செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது


Advertisement