வெற்றியை வசப்படுத்திய `கில்லி' ஷமி!


ஆப்கனின் ஸ்பின் தாக்குதலை எதிர்கொள்ளவதில் இந்திய அணி வீரர்கள் சற்று தடுமாறி வந்தனர்.
ஆப்கானிஸ்தான் ( AP )
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்றுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி இன்று ஐந்தாவது போட்டியாக ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடி வருகிறது. சவுத்ஹாம்ப்டன் நகரில் நடந்து வரும் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அணியில் ஒரே ஒரு மாற்றமாக காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இல்லை. அவருக்குப் பதிலாக முகமது ஷமி இடம் பெற்றுள்ளார்.
ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
AP
வீழ்ந்த ஹிட்மேன்!
ஆட்டத்தின் முதல் ஓவரை ஆப்கன் வீரர் முஜீப் ரஹ்மான் வீசினார். இந்த தொடரில் இரண்டு செஞ்சுரிகளை அடித்து வலுவான பார்மில் இருக்கும் `ஹிட்மேன்' ரோஹித் ஷர்மா இந்த முறை தடுமாறினார். முதல் ஓவரில் இருந்தே தடுமாறிய அவர் 10 பந்துகளில் ஒரு ரன்கள் எடுத்த நிலையில் முஜீப் ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஸ்பின்னாரிடம் விக்கெட்டை பறிகொடுத்த முதல் வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ரோஹித். தொடர்ந்து கேப்டன் கோலியுடன் கேஎல் ராகுல் இணைந்தார்.
`ஸ்லோ' ராகுல்!
முதல் ஓவரில் இருந்தே மந்தமான ஆட்டத்தை விளையாண்டு வந்தார் கேஎல் ராகுல். முதல் 5 ஓவர்களில் 17 பந்துகளை பிடித்த 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 5.2 ஓவரில் தான் முதல் பவுண்டரியை அடித்தார் ராகுல். இது தான் டீமின் முதல் பவுண்டரியும்கூட.
கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்
இப்படி ஸ்லோவாக விளையாடி வந்த ராகுல் 53 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது நபியின் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று கேட் 
கோலி அரைசதம்!
ராகுல், ரோஹித் மோசமாக விளையாடினாலும், கோலி விரைவாக ரன் சேர்ப்பதில் மும்மரம் காட்டினார். ஆப்கனின் ஸ்பின் தாக்குதலை எளிதாக எதிர்கொண்ட அவர் ஒருநாள் போட்டிகளில் 52வது அரை சதம் கடந்தார்.
விராட் கோலி
விராட் கோலி
அவருக்கு பக்கபலமாக இருந்த விஜய் சங்கரும் 29 ரன்களில் வெளியேற தற்போது வரை இந்திய அணி 26.1 ஓவருக்கு 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது கோலியுடன் இணைந்து தோனி விளையாடி வருகிறார்.
தொடரும் ஸ்பின் ராஜ்ஜியம்!
ஆப்கன் ஸ்பின் வீரர்கள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். நிதனமாக விளையாடி வந்த கேப்டன் கோலி 67 ரன்கள் எடுத்திருந்தபோது நபி ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நபியும், முஜீப்பும் சேர்ந்து இதுவரை 15 ஓவர்கள் வரை வீசிவிட்டனர். இருவரும் விட்டுக்கொடுத்த ரன்கள் என்றால் 50 மட்டுமே. கோலி, ரோஹித் என முக்கிய மூன்று விக்கெட்டுகளையும் இந்தக் கூட்டணி வெளியேற்றியுள்ளது. தற்போது தோனியும், கேதர் ஜாதவும் விளையாடி வருகின்றனர்.
கோலி
கோலி
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி ஸ்பின்னில் மட்டும் 53 ஓவர்களை சந்தித்துள்ளது. இதில் ஒரு விக்கெட் கூட விழவில்லை. ஆனால் இன்றைய போட்டியில் 25 ஓவர்கள் பிடிப்பதற்குள்ளாகவே நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
கேதர் ஜாதவ் fifty!
ஆப்கன் ஸ்பின்னர்கள் இந்திய அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருந்த அதேவேளையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் எடுத்துக்கொண்டிருந்தனர். கடந்த சில போட்டிகளாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த கேதர் ஜாதவ் இன்று வாய்ப்பு கிடைத்தும் மிகவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனி, பாண்டியா என இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களின் சுழற்புயலில் சிக்கி அடுத்தடுத்து வெளியேறினாலும் பொறுமையாக விளையாடிய கேதர் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
கேதர் ஜாதவ்
கேதர் ஜாதவ்
AP
3 ஆண்டுகளில் இது தான் குறைந்தபட்ச ஸ்கோர்!
அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை நயிப் மற்றும் நபி ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு இன்றைய ஆட்டத்தில் தான் முதல் இன்னிங்ஸில் இவ்வளவு குறைவான ஸ்கோர் எடுத்துள்ளது இந்தியா.
வெற்றியை நெருங்கும் ஆப்கன்!
225 ரன்கள் இலக்கை துரத்திய ஆப்கன் அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் வெற்றி பெற தேவையான 4.5 ரன் ரேட்டை தக்கவைத்துக் கொண்டு விளையாடியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர் இந்திய பௌலர்கள். ஒருகட்டத்தில் 43 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது ஆப்கன். ஆரம்பம் முதலே மிரட்டலான பந்துவீச்சை வீசிய பும்ரா ஒரு மெய்டனுடன் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆப்கன்
ஆப்கன்
தனது ஒரே ஓவரில் ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கினார். இதேபோல் சஹாலும் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். 53 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற நிலையில் அதிரடி ரஷீத் கானும், முகமது நபியும் களத்தில் உள்ளனர். இதனால் கடைசி நேரத்தில் இந்தியா அணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
`கில்லி' ஷமி!
30 பந்துகளில் 40 ரன்கள் என்ற நிலையில் ரஷீத் அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். சஹால் வீசிய 46வது ஓவரில் பவுண்டரி அடிக்க, அடுத்த பந்திலேயே ரஷீத்தை ஸ்டெம்பிங் செய்து ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார் தோனி. இருப்பினும் மறுமுனையில் இருந்த முகமது நபி பும்ரா ஓவரில் சிக்ஸ் அடிக்க பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி ஒரு ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷமி பந்துவீசினார்.
ஷமி
ஷமி
முதல் பந்தில் நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்தவர், மூன்றாவது பந்திலேயே நபி, நான்காவது பந்தில் அஃப்டாப், ஐந்தாவது பந்தில் முஜீப் என கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து வெற்றியை இந்திய அணி வசப்படுத்தினார் ஷமி. இறுதியாக ஒரு பந்து முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஷமி நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதேபோல் சஹால், பும்ரா, பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


--- Advertisment ---