தென்னாப்பிரிக்கா இனி அரை இறுதிக்கு தகுதி பெறுமா




எட்டு ஆண்டுகளுக்கு முன் 2011 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது தென்னாப்பிரிக்கா.
இந்த ஏழு ஆண்டுகளில் நேற்றோடு சேர்த்து ஐசிசி தொடர்களில் இந்தியாவோடு மோதிய ஆறு போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது தென்னாப்பிரிக்கா
Presentational grey line
உலகக் கோப்பை டி20
ஆண்டு - 2012
தென்னாப்பிரிக்கா - ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி
Presentational grey line
சாம்பியன்ஸ் டிராபி
ஆண்டு - 2013
தென்னாப்பிரிக்கா - 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
Presentational grey line
உலகக் கோப்பை டி20
ஆண்டு - 2014
தென்னாப்பிரிக்கா - ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
Presentational grey line
உலகக் கோப்பை ஒருநாள் தொடர்
ஆண்டு -2015
தென்னாப்பிரிக்கா - 130 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
Presentational grey line
சாம்பியன்ஸ் டிராபி
ஆண்டு - 2017
தென்னாப்பிரிக்கா - எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
Presentational grey line
உலகக் கோப்பை
ஆண்டு - 2019
தென்னாப்பிரிக்கா - ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
Presentational grey line
2015 உலகக் கோப்பைக்கு பிறகு தென்னாப்பிரிக்கா 18 தொடர்களில் விளையாடிவிட்டது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இந்தியா ஆகிய அணிகளுடன் தலா ஒரு ஒருநாள் தொடரில் தோல்வியடைந்திருக்கிறது. 2017 சாம்பியன்ஸ் டிராபியில் அரை இறுதிக்கே தென்னாப்பிரிக்கா தகுதி பெறவில்லை. இதை தவிர்த்து பார்த்தால் தென் ஆப்ரிக்கா மற்ற 13 தொடர்களிலும் வென்றுள்ளது.
இம்ரான் தாஹீர்படத்தின் காப்புரிமைSTU FORSTER-IDI
இந்த உலகக் கோப்பையை நிச்சயம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் ஒன்றாக தென்னாப்பிரிக்கா பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களாலும் மதிப்பிடப்படவில்லை.
ஆனால் தற்போது அரை இறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி பெறுமா என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது.
டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றவுடன் தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் நடுவரிசை பலமிழந்து காணப்பட்டது. குறிப்பாக திடீரென ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லை என கூறப்பட்டது. ஆனால் டு பிளசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா டி வில்லியர்ஸ் ஓய்வுக்கு பின்னர் விளையாடிய ஐந்து ஒருநாள் தொடர்களிலும் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளையும் வென்றிருந்தது.
ஆனால் தற்போது உலகக் கோப்பை தொடரில் புள்ளிப்பட்டியலில் வெற்றிக் கணக்கை துவங்க முடியாமல் தவித்து வருகிறது தென்னாப்பிரிக்க அணி.
டேவிட் மில்லர்படத்தின் காப்புரிமைSTU FORSTER-IDI
இங்கிலாந்திடம் முதல் போட்டியில் தோல்வியடைந்த தென் ஆப்ரிக்கா, இரண்டாவது போட்டியில் வங்கதேசத்திடமும் மூன்றாவது போட்டியில் இந்தியாவிடமும் தோல்வியடைந்திருக்கிறது.
ரவுண்ட் ராபின் சுற்றில் ஐந்து போட்டிகளிலாவது வென்றால் தான் அரை இறுதிக்கு எளிதில் தகுதி பெற முடியும். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு இனி ஆறு போட்டிகள்தான் மீதமிருக்கின்றன. இனி கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலும் நாக் அவுட் போலதான் விளையாட வேண்டும்.
அதாவது கோப்பையை வெல்ல வேண்டுமெனில் தொடர்ச்சியாக 7-8 போட்டிகளில் வெல்ல வேண்டிய அவசியம் ஏற்படக்கூடும். ஆனால் தென் ஆப்ரிக்கா நாக் அவுட்டில் குறிப்பாக ஆட்டத்தின் மிக முக்கியமான போட்டிகளில் மிக முக்கியமான தருணத்தில் மிக மோசமாக செயல்பட்டு தோல்விடையவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.
ஃபாப் டு பிளசிஸ்படத்தின் காப்புரிமைALEX DAVIDSON
குரோனியேவின் கேப்டன் காலம் முடிந்து பொல்லாக் காலத்திலும் சரி, கிப்ஸ் காலத்திலும் சரி, டி வில்லிலியர்ஸ் கேப்டனாக இருந்த போதும் சரி தென்னாப்பிரிக்காவின் 20 ஆண்டுகால வரலாறு ஒரே கதையைத் தான் சொல்கிறது. அது தென்னாப்ரிக்காவுக்கு எதிராக எந்த அணி அதி முக்கியமான போட்டிகளில் விளையாடினாலும் சரி எந்தவொரு சூழலில் அந்த அணி மனம் தளர வேண்டாம். தென்னாப்பிரிக்கா நிச்சயம் ஏதும் தவறு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அதற்காக காத்திருக்கலாம் என்பதே.
கிரிக்கெட் உலகில் இங்கிலாந்து, நியூசிலாந்து ரசிகர்களை போலவே தென்னாப்பிரிக்க ரசிகர்களும் பல ஆண்டுகளாக கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக காத்திருக்கிறார்கள்.
ககிசோ ரபாடாபடத்தின் காப்புரிமைIAN KINGTON
இங்கிலாந்தும் நியூசிலாந்து தோல்வியடைகின்றன. ஆனால் தென்னாப்பிரிக்காவின் தோல்வி என்பது அந்த அணி எளிதில் நம்புவதற்கு கடினமான வகையில் நிலைகுலைந்து போகிறது என்பதே.
வழக்கமாக கோப்பையை வெல்வதற்கான முக்கியமான போட்டிகளில் தடுமாறும் தென்னாப்பிரிக்க அணி இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றிக்காகவே கடுமையாக தடுமாறுகிறது. ஃபீல்டிங்கில் தொடர்ந்து சொதப்பலாக செயல்பட்டு வருகிறது.
ரபாடா, டு பிளசிஸ், டீ காக் என மிகச்சில வீரர்களை அதிகம் நம்பியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. ஆம்லா, மில்லர், டுமினி போன்ற சீனியர் வீரர்கள் அவர்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார்கள். சுழற்பந்தை எதிர்கொள்வதில் கடுமையாக திணறுகிறது அந்த அணி.
இந்தச் சிக்கல்கள் மட்டுமின்றி, டி வில்லியர்ஸ் ஓய்வு, ஸ்டெயினின் விலகல், நிகிடியின் காயம் உள்ளிட்ட அழுத்தங்களில் இருந்து வெளியே வர தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு வெற்றி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் புள்ளிப்பட்டியல் சொல்லும் சேதிகளை பார்த்தால் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரே ஒரு தோல்வி கூட இந்த தொடரில் இருந்து அந்த அணியை வெளியேற்றக்கூடும்.