நில அளவைக்கள உத்தியோகத்தராகும் வாய்ப்பு!




இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தின் கீழ் நிலவும் நில அளவைக்கள உத்தியோகத் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.



தகைமைகள்.-

5.1 கல்வித் தகைமைகள்:

 (அ) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தது
இரண்டு திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

5.2 தொழில்சார் தகைமைகள்

நில அளவைக் கள உதவியாளர் பதவிக்குரிய மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால்
தீர்மானிக்கப்பட்டுள்ளவாறு தேசிய தொழிற் பயிற்சித் தகைமையில் (NVQ) குறைந்த பட்சம் இரண்டாவது மட்டத்தில்
தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

5.3 ஆகக் குறைந்த நிபுணத்துவம்

 (அ) நில அளவைக் களத்தை இனங்காண உதவுதல்
 (ஆ) அளவை உபகரணங்களையும கருவிகளையும் பாதுகாத்தலும் பராமரித்தலும்

5.4 உடல் சார் தகைமைகள்

சகல விண்ணப்பதாரர்களும் இலங்கையின் எந்தப் பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்கும், பதவிக்குரிய கடமைகளை
நிறைவேற்றுவதற்கும் தேவையான உடல், உள ரீதியான தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.