உலகக்கோப்பை:தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது வங்க தேச அணி

நேற்று நடந்த உலகக்கோப்பை லீக்  ஆட்டத்தில் வங்க தேச அணி 330 ரன்களை எடுத்தது. இதுவே சர்வதேச போட்டியில் அந்த அணியின் அதிக பட்ச ஸ்கோர் ஆகும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 330 ரன்களை எடுத்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் வங்க தேச அணி தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 2014-ஆம் ஆண்டு தாகாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 326 ரன் எடுத்ததுவே ஒருநாள் போட்டியில் அந்த அணியின் அதிக பட்ச ஸ்கோராகும். 2015-ல் நடந்த உலகக்கோப்பையில் ஸ்காட்லந்துக்கு எதிராக 322 ரன் சேர்த்ததுவே உலகக்கோப்பையில் வங்க தேச அணியின் அதிக பட்ச ஸ்கோராக இருந்துள்ளது.


--- Advertisment ---