மிருசுவில், ரயில் விபத்தில் பெண் பலி

யாழ். மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதி 50 வயதான பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளார். 

இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் மிருசுவில் - ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வாி (வயது50) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளார். 

குறித்த பெண்மணி வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை கடந்து ஆலயத்தில் வழிபட்டுவிட்டு மீண்டும் ரயில் பாதையை கடந்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோதே விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில் சிக்கிய குறித்த பெண்மணியின் உடல் சிதைவடைந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார் பொதுமக்களை அப்புறப்படுத்திவிட்டு சிதைவடைந்த உடல் பாகங்களை அங்கிருந்து உடனடியாக மீட்டுள்ளனர். 

(யாழ். நிருபர் பிரதீபன்)Advertisement