கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்காக


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐந்தாவது நாளான இன்று மாலை இவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு இந்து விவகார சமூக நல்லிணக்க அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் அமைச்சருமான தயா கமேக அவர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோருடன் பிரதேசத்திறக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டகாரர்களுடன் கலந்துரையாடினார்கள்.


--- Advertisment ---