நோன்பு துறந்தார்,தேரர்


கடந்த நான்கு தினங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அத்துரலியே ரத்தன தேரர், தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியதீன் ஆகியோரை பதவி விலக்குமாறு கோரியே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 

உண்ணாவிரத போராட்டத்தின் பிரதிபலிப்பாக சற்று முன்னர் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர். 

இதனையடுத்து அத்துரலியே ரத்தன தேரர் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பின்னர் அவர் கண்டி வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.