மீன்பிடிக்க சென்ற 6 பேரில் ஒருவர் மாயம்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முகத்துவாரம் பிரதேசத்தில் நேற்று இரவு 9.30 மணிக்கு இரவு கடற்தொழிலுக்கு சென்ற ஆறு மீனவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார். 

கரை திரும்பிய ஐவரில் ஆபத்தான நிலைமையில் இருந்த 17 வயதானவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கானாமல் போனவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியானது லங்கா பட்டுன கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். 

காணாமல் போன நபர் 28 வயதுடைய பாலசிங்கம் பரமானந்தம் எனவும் இவர் திருமணம் முடித்து 6 மாதங்களே நிறைவு பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

(திருகோணமலை நிருபர் கீத்)


Advertisement