தடம் புரள்வு

(க.கிஷாந்தன்)
ஊந்துருளி தடம் புரண்டதில் போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் பணிபுரிந்த வந்த நபர் உயிரிழந்துள்ளதாகஅக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் 31.07.2019 இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் இருந்து 03ம் பிரிவு பகுதிக்கு பொருட்களை ஏற்றி சென்ற போதே குறித்தஊந்துருளி பாதையை விட்டு விலகி தடம் புரண்டத்தில் சாரதியும் அதன் சேவையாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
அதன் பிறகு அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு குறித்த இருவரையும் கொண்டு செல்லும் போது மேற்படி சேவையாளர் உயிரிழந்துள்ளதாகவும் பலத்தகாயங்களுக்குள்ளான ஊந்துருளியின் சாரதி அக்கரபத்தனை வைத்தியசாலையில் இருந்துநுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தில் பலியான நபர் 35வயதுடைய எஸ்.பொடிமாத்தியா என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகபொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் அக்கரபத்தனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு, சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லபடவுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாராங்கள் தகவல் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது


--- Advertisment ---