நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய சூழ்நிலையை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும்

பாறுக் ஷிஹான் 

நமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது.சுபீட்சமான முறையில்  நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய சூழ்நிலையை எதிர்காலத்தில் உருவாக்க  வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை 12 வட்டார வேட்பாளர் யு.எல் அப்துல் றஹ்மான் தலைமையில் சனிக்கிழமை(27) மாலை இடம்பெற்ற புனரமைக்கப்பட்ட வீதிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தனது கருத்தில்

இன்று நமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையும் அதன் உயர் பீடம்  பல்வேறுபட்ட  அழுத்தங்களுக்களுக்கும் உள்ளாகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையும் அதன் உறுப்பினர்களும் முஸ்லிம் சமூகமும் இவ்வாறு பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் பல வருடங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காலகட்டத்தில் நாங்கள் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில் எங்களுடைய கட்சியும் உங்கள் கட்சியின் தலைமைத்துவமும் அதே போன்று உயர்பீட உறுப்பினர்களும் இருந்து கொண்டிருக்கின்றோம்.

இதற்கு எதிர் வரும் காலங்களில் உங்களுடைய தலைமைத்துவத்தை பலப்படுத்தி அந்த தலைமைத்துவம் யாரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக அல்லது இந்த நாட்டை ஆளக்கூடிய ஒரு சக்திவாய்ந்த தலைவராக அடையாளம் காட்டுகிறோம். அதற்கு  இன்னும் மூன்று நான்கு மாதங்களை முகம் கொடுக்க வேண்டி உள்ளது.

இன்று ஏற்பட்டிருக்கும் இருந்த சூழ்நிலையின் காரணத்தினால் இலங்கையில் இருக்கின்ற சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள்  சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றன.

எதிர்காலத்தில் சுபீட்சமான முறையில்  நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய சுழ்நிலையை ஏற்படுத்த  வேண்டும். அது சில வேளை எங்களுக்குள்ளே பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டு  முரண்பட்டுக்கொண்டிருக்காமல் எங்களுக்குள்ளே ஒற்றுமையை வாழ்க்கையை மேற்கொள்ள வழிவகையை தேடவேண்டும்.

கல்முனை பிரச்சினை கூட தற்போது  பூதாகரமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் கட்சி பேதமின்றி இருக்கின்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் என்றும் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம் .வருகின்றோம்.என குறிப்பிட்டார்.


Advertisement