கொடி பறக்குது




பாறுக் ஷிஹான்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் முன்னால் ஏற்றப்பட்டுள்ள தேசிய கொடியின் நிலையே இது என கடந்த 28.6.2019 அன்று செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியில்  கடந்த ஒரு மாத காலமாக இந்த கொடி சேதமடைந்து கிழிந்து தொங்கி பறக்கின்றதை யார் அறிவார்?

ஒரு நாட்டின் கொடியானது எவ்வளவு பெறுமதியானது என்பதை இச்செயலக பிரதேச செயலாளர் அறிவாரா?

சுதந்திரப் போராட்டத்தின்போது சுதந்திர உணர்வையும் ஒற்றுமையையும் மக்களிடம் உருவாக்க ஒரு கொடி தேவைப்பட்ட வரலாறை அறியாத இச்செயலக அதிகாரிகள் சேதமடைந்த கொடியினை மாற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

என வினாக்கள் எழுப்பப்பட்டு இலங்கையின் தேசியக்கொடி மஞ்சள் நிறப் பின்னணியில் அமைந்துள்ளது. இதில் இரண்டு பகுதிகளைக் காணமுடியும். கொடிக் கம்பத்தின் பக்கம் இருக்கும் பகுதியில் செம்மஞ்சளும் பச்சையுமான நிலைக்குத்தான இரண்டு பட்டைகள் உள்ளன. கொடியின் பெரும்பகுதியை அடக்கியுள்ள மற்றப்பகுதி கருஞ் சிவப்பு நிறத்தில் மஞ்சள் நிறத்திலான வாளேந்திய சிங்கமொன்றையும் நான்கு மூலைகளிலும் அரச மரத்து இலைகளையும் கொண்டுள்ளது. செம்மஞ்சள் நிறப் பட்டை தமிழரையும் பச்சை நிறப் பட்டை முஸ்லீம்களையும் சிங்கத்துடன் கூடிய கருஞ் சிவப்பு நிறப் பகுதி சிங்களவர்களையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.

மேற்படி விடயம் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 23.7.2019 கிழிந்து தொங்கிய பழைய கொடி மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய தேசிய  கொடி பிரதேச செயலகத்தின் முன்பாக பறக்கின்றது.