இத்தாவிலில் இன்று

கிளிநொச்சி, பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் பகுதில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கறிகள் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த லொறியும் எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே லொறியின் சாரதியும் டிப்பர் வாகனத்தின் சாரதியும் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையைப் பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் லொறியைச் செலுத்தி வந்த சாரதி மதுபோதையில் இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது எனப் பளைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


--- Advertisment ---