#CWC2019 தற்போது புள்ளிப்பட்டியலில் என்ன நிலைமை?


தற்போது புள்ளிப்பட்டியலில் என்ன நிலைமை?
1. ஆஸ்திரேலியா - 14 புள்ளிகள்
2. இந்தியா - 13 புள்ளிகள்
3. இங்கிலாந்து - 12 புள்ளிகள்
4. நியூசிலாந்து - 11 புள்ளிகள்
5. பாகிஸ்தான் - 9 புள்ளிகள்
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணியை வென்றதன் மூலம் எட்டு புள்ளிகள் எடுத்திருந்த இலங்கை அணியின் அரை இறுதி வாய்ப்பு கரைந்து போனது. இந்தியாவுடன் வென்றாலும் இலங்கை அணிக்கு 10 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும்.
பாகிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அதிசயிக்கத்த வகையில் மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்குள் நுழைய முடியும். அதாவது பாகிஸ்தான் அணி 300-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். வங்கதேசம் அணி ஒருவேளை முதலில் பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு கனவாகிப் போகும். பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் நான்காமிடமே பிடிக்கும்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. நான்காவது அணியாக நியூசிலாந்து உள்ளே நுழைய வாய்ப்பிருக்கிறது எனினும், அது பாகிஸ்தான் - வங்கதேச போட்டியின் முடிவை பொறுத்தே அமையும்.

அரை இறுதிப்போட்டிகள் எப்படி நடைபெறும்?

புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணியும் நான்காம் இடம் பிடிக்கும் அணியும் ஜூலை 9-ம் தேதி மான்செஸ்டரில் நடக்கும் போட்டியில் முதல் அரை இறுதியில் மோதும்.
இரண்டாமிடம் பிடிக்கும் அணியும் மூன்றாமிடம் பிடிக்கும் அணியும் பெர்மிங்காம் மைதானத்தில் ஜூலை 11-ம் தேதி நடக்கும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் மோதும்.
ஆஸ்திரேலியா லீக் சுற்றில் தனது கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. இப்போட்டியில் வென்றால் 16 புள்ளிகளோடு முதலிடம் பிடிக்கும். ஒருவேளை தோற்றாலும் இலங்கையிடம் இந்தியா தோற்கும் பட்சத்தில் முதலிடத்திலேயே நீடிக்கும்.
ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போட்டி மழையால் கைவிடப்பட்டால் ஆஸிக்கு 15 புள்ளிகள் கிடைக்கும். அப்படியொரு சூழலில் இந்தியா இலங்கையை வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கும் 15 புள்ளிகள் கிடைத்துவிடும் என்பதால் ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் யாருக்கு என்பது தீர்மானமாகும்.
ஆஸ்திரேலியா தென்னாப்ரிக்காவிடம் தோல்வியடைந்து இந்தியா- இலங்கை இடையிலான போட்டிகள் மழையால் கைவிடப்பட்டால் இரு அணிகளும் 14 புள்ளிகளோடு இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் தீர்மானிக்கப்படும்.
தற்போது ஆஸ்திரேலியா +1 எனும் ரன் ரேட்டில் உள்ளது. இந்தியா 0.811 எனும் ரன் ரேட்டில் உள்ளது.
புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடம் அல்லது இரண்டாவது இடம் பிடிக்க மட்டுமே வாய்ப்பிருக்கிறது. மூன்றாவது அல்லது நான்காவது இடம் பிடிக்க முடியாது.
இந்தியாவும் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடியும்.
ஆஸ்திரேலியா இரண்டாமிடமும் இந்தியா மூன்றாமிடமும் பிடிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்பதால் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை சந்திக்க வாய்ப்புகளே இல்லை.
இந்தியாபடத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR
ஆகையால் இந்திய அணி நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து அணியை அரை இறுதிப்போட்டியில் சந்திக்கும். அரிதாக பாகிஸ்தானை சந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இந்தியா v இங்கிலாந்து அரை இறுதியில் மோதுமா?

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்ரிக்க அணியை வெற்றிகொண்டு விட்டால், இந்தியா- இலங்கை போட்டியில் எந்தவித முடிவு கிடைத்தாலும் புள்ளிப்பட்டியில் இந்திய அணி இரண்டாவது இடத்திலேயே நீடிக்கும்.
இங்கிலாந்து மூன்றாவது இடத்தை உறுதி செய்துவிட்டது .
ஆகையால் இந்திய அணி இரண்டாவது பிடிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.

இந்தியா V நியூசிலாந்து/ பாகிஸ்தான் சாத்தியமா?

சாத்தியமே.
இந்திய அணி இலங்கை அணியை வெற்றி கொள்ள வேண்டும், தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும்.
இந்த இரு போட்டிகளும் ஜூலை ஆறாம் தேதி நடக்கவுள்ளது.
மேற்கண்ட முடிவுகள் கிடைத்தால் இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்கும்.
இங்கிலாந்துபடத்தின் காப்புரிமைGARETH COPLEY-IDI
ஒருவேளை ஆஸி- தென்னாபிரிக்கா போட்டி மழையால் கைவிடப்பட்டு, இந்தியா இலங்கையை வெற்றிகொள்ளும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடம் பிடிக்க வேண்டும்.
இவை நடந்தால் இந்தியா நியூசிலாந்து/பாகிஸ்தான் அணியை அரை இறுதியில் எதிர்கொள்ளும்.
இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் பட்சத்தில் அந்த அரை இறுதி ஆட்டம் பெர்மிங்காம் மைதானத்தில் நடக்கும். லீக் சுற்றில் இதே மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதின. இதில் இந்தியா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
லீக் சுற்றில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆனால் பயிற்சிப்போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.