MSM.ஜஃபர்-
23/03/2026
"முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள்" எவரும் இல்லாத பிரதேச செயலகமாக காத்தான்குடி பிரதேச செயலகம்!
உரிய நடவடிக்கை எடுக்காமல் காலத்தைக் கடத்தும் அதிகாரிகளின் அசமந்த போக்கு!!
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இலங்கைத் தீவின்,
நூறுசதவீத முஸ்லிம் மக்களைக் கொண்ட காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் உள்ள நான்கு முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள் பிரிவுகளும்,
விவாகப்பதிவாளர்கள் நியமிக்கப் படாமல்
நீண்டகாலமாக வெற்றிடமாக காணப்படுகிறது.
அவசர, அவசியமான தேவையாக கருதப்பட்டுவரும் முஸ்லிம் விவாகப்பதிவாளர் வெற்றிடத்திற்கு இதுவரை யாரையும் நியமிக்காமல் இழுத்தடிக்கப்
படுவதால் காத்தான்குடி மக்கள் தங்கள் விவாகப்பதிவுகளைச் செய்து கொள்வதில் வீணான பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் விவாகப்பதிவாளர் பிரிவகளும் வெற்றிட விபரங்களும்:-
1)காத்தான்குடி வடக்கு பிரிவு:-
இப்பிரிவிற்கான
வெற்றிடம் சுமார் 3 வருடங்களாக இருந்துவருகின்ற போதிலும் இவ்வெற்றிடத்தை நிரப்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
2)காத்தான்குடி
மத்தி பிரிவு:-
இப்பிரிவிற்கான
வெற்றிடம் ஏற்பட்டு ஒருவருடம் கடந்தும் இவ்வெற்றிடத்தை நிரப்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
3) காத்தான்குடி தெற்குபிரிவு:-
இப்பிரிவிற்கான வெற்றிடம் ஏற்பட்டு
நான்கு வருடங்கள் கடந்தும் இதுவரை இவ்வெற்றிடத்தை நிரப்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
4) புதிய காத்தான்குடி பிரிவு:-
அதிக மக்களை உள்ளடக்கியதான இப்பிரிவிற்கான வெற்றிடம் ஏற்பட்டு
நான்கு மாதங்களாகியும் இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
சுமார் 60000 ஆயிரம் தாண்டிய சனத்தொகை கொண்ட காத்தான்குடி மக்கள் தங்களது
முஸ்லிம் விவாகங்களை பதிவுசெய்வதற்காக பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
இவ்வாறு உரிய பகுதிகளுக்கு,உரிய முஸ்லிம் விவாகப்பதிவாளர்களை நியமிக்காது கைவிடப்பட்ட மக்கள் விவாகப்பதிவுகளை மேற்கொள்வதற்கு
யாரைத் தொடர்பு
கொள்ள வேண்டும்?
இதற்கான
மாற்று வழி என்ன?
என்பது பற்றி மக்களுக்கு சீரான அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்படாததால்
பொதுமக்கள்
வீணான அலைச்சலையும், நேரவிரயத்தையும்,அதிக பணச் செலவும் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை எதிர்நோக்குகின்றனர்.
வருடாந்தம் சுமார் 500 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் விவாம் நடைபெறும் காத்தான்குடி பிரதேச்செயலகப் பிரிவில் பதிவாளர்கள் நியமிக்கப்படாமையானது இவ்வூரின் நிருவாக முறைமையில் பெருங்குறையாக பேசப்படுகின்றது.
தற்போது பல மாதங்களாக
ஆரையம்பதி பாலமுனை பதிவாளர் ஒருவரை காத்தான்குடி முழுவதற்குமான
(4விவாகப்பிரிவிற்கும்)
பதில்முஸ்லிம் விவாகப்பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இவர் தற்போது பாலமுனையுடன் சேர்த்து பதிலகடமைகளாக காங்கேயனோடை ,
காத்தான்குடி, வடக்கு,
காத்தான்குடி தெற்கு, காத்தான்குடி மத்தி,
புதிய காத்தான்குடி
ஆகிய ஐந்து அயல் பிரிவுகளுக்கும் பதில் கடமையாற்ற நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
இப்பதிவாளரால் இப்பெரும் பணியை நிறைவேற்றுவதில் உள்ள நடைமுறைச்சாத்திமற்ற இக்கட்டான சூழ் நிலையை கருத்தில் கொள்ளாமல் பதில் கடமை வழங்கப்பட்டிருப்பது
உரிய அதிகாரிகளின் வினைத்திறனின் வெளிப்பாட்டை தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
காத்தான்குடி மக்களின் நலனில் கரிசனை காட்டும் பொது நிறுவனங்கள், ஊரின் தலையாய பிரச்சினையான முஸ்லிம் விவாகப்பதிவாளர்கள் இத்திகதி வரை நியமிக்கப்டாமல் வருடக்கணக்கில் தாமதப்படுவது பற்றி தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
தற்போது திருமணகாலம் ஆதலால் நாளாந்தம் அதிக திருமணப்பதிவுகளை
ஒரே நாளில்,
ஒரே நேரங்களில்
பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் பதில் பதிவாளரை தேடி
பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து பாலமுனை பிரதேசத்திற்கு அவரது வீட்டிற்கு சென்று படிவம் பெற்று வந்து மீண்டும் அவரைத்தேடி படிவத்தையும் பணத்தையும்
ஒப்படைக்க எவ்வளவு சிரமங்களும்,செலவுகளும் மக்களுக்கு ஏற்படும் என்பதையும் பொறுப்பு வாய்ந்தவர்கள் கவனத்தில் கொண்டு அவசர,அவசியமாக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் குறித்த விவாகப்பதிவு கட்டணத்தில் சரியான தெளிவின்மை காணப்படுவதால்,
விவாகப்பதிவிற்கான கட்டண விபரம் தொடர்பான தொளிவான அறிவித்தல் விடப்படவேண்டும் என சேவைபெறுவோர் விரும்புகின்றனர்.
இது விடயமாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊர் பொது நிறுவனங்கள் உடனடியாக கவனம் செலுத்தி அவசர, அவசியமாக காத்தான்குடியின் நான்கு பதிவாளர்கள் பிரிவிற்கும் முஸ்லிம் விவாகப்பதிவாளர்களை நியமிக்க காத்திரமான நடவடிக்கை எடுப்பதுடன்,
இப்பதவி வெற்றிடங்கள் வருடக்கண்கில் நிரப்பப்படாமைக்கான காரணங்களை மேதகு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பரை விடுத்து உடனடியாக பதிவாளர்களை நியமிக்க ஆவன செய்தல் காலத்தின் கடமையாகும்.
-MSM.ஜஃபர்-


Post a Comment
Post a Comment