காலநிலை மாற்றத்தால் கடற்றொழில் பாதிப்பு

பாறுக் ஷிஹான்

காலநிலை மாற்றங்கள் தொடர்ந்து கடந்த இரு தினங்களாக நிலவுவதால்  கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை(2) மருதமுனை, பாண்டிருப்பு,பெரியநீலாவணை சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம் , கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுதனால்   மீன்பிடி குறைவடைந்துள்ளது.

 மேலும் இதனால் கரைவலை மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாயவலை மீனவர்கள் சில இடங்களில் மீன்பிடியில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர்.அத்துடன் மீன்பிடி உபகரணம் உள்ளிட்ட படகுகள் கரையோரங்களில் மூடி வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்....

 திடீரென கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் மீன்பிடித்தொழில் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், அன்றாட மீன்பிடி  குறைவடைந்துள்ளதனால் நாளாந்த வருமானமும் பாதிப்புற்றுள்ளது.

கடல் நீரோட்டத்தின் தன்மையின் மாற்றம் காற்றின் வேகம் , நீரின் தன்மையின் மாறுதல் போன்ற காரணிகளால் கடற்றொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தெரிவித்துள்ளனர்.


Advertisement