நினைவு கூரல்




Farook Sihan

கல்விக்காய் தனது பாரிய அர்ப்பணிப்பை செய்த சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக்கொண்ட மர்ஹூம் எம்.சி.அப்துல் ஹமீத்   இம்மண்ணை விட்டுப்பிரிந்து ஓராண்டுகள் நிறைவைந்துள்ள நிலையில் அவருக்காக பிராத்தனை செய்து நினைவுகூரும் நிகழ்வு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(18)  சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மர்ஹூம் எம்.சி.அப்துல் ஹமீதின்  குடும்ப உறவினர்கள் மதப்பிரமுகர்கள் கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது மர்ஹூம் எம்.சி.அப்துல் ஹமீத் தொடர்பிலான சொற்பொழிவு பலவும் இடம்பெற்றன.

வரலாறு சுருக்கம்

அல் அமான் கலவன் பாடசாலையாக இருந்ததை கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்  எம்.சீ அஹமது  கல்வி அமைச்சர் பதிஉதீன் மஹ்மூதின்  ஒத்துழைப்புடன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியாக உருவாக்கிய போது அதன் ஸ்தாபக அதிபராக நியமனம் பெற்றவர் அல்ஹாஜ் எம் ஸி ஏ ஹமீத் (மாஸ்டர்) .

இவரது தன்னலம் கருதாத சேவையினால் கல்லூரி தன் ஆரம்ப நிலையிலிருந்து உச்ச வளர்ச்சி பெற்றது...
இவர்  சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பொருளாளராகவும் இருந்து அதன் அபிவிருத்தியிலும் பங்கேற்று இப்போதைய அதன் கம்பீரமான தோற்றத்துக்கும் கால்கோளாக அமைந்தவர்.

உலக-ஊர் வரலாறுகளை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் அபார ஞாபகசக்தியும் நுண்ணறிவும் வாய்க்கப்பெற்ற அன்னார் தன் 93 ஆவது வயதில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின்போது பிடிக்கப்பட்ட படங்கள்..(பாறுக் ஷிஹான்)