பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி

(க.கிஷாந்தன்)

அட்டனிலிருந்து – எபோட்சிலி வரை செல்லும் ஆறு கிலோ மீற்றர் பிரதான வீதி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மக்கள் பாவனைக்குதவாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் இதனை புனரமைப்பு செய்து தரும்படி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சுமார் 200 பேர் வரை லெதண்டி தோட்டத்தின் மார்பரோ (களனிவத்தை) பிரிவில் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

எபோட்சிலி தோட்டத்தில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த பிரதான வீதியினூடாகவே அட்டன் நகரிற்கு தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள வந்துச் செல்ல வேண்டும்.

இவ்வீதி தொடர்பில் காலங்காலமாக இப்பகுதி மக்கள் அரசியல்வாதிகள் மற்றும் தோட்ட நிர்வாகங்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் இவ்வீதியை சீர்திருத்தம் செய்வதில் நடவடிக்கை எடுத்ததாக இல்லை.

தேர்தல் காலத்தில் இந்த ஆட்சியின் ஊடாக எமது வீதி சீர்திருத்தம் செய்யபபடும் என்ற நம்பிக்கையில் எமது வாக்குகளை அளித்தோம்.

ஆனால் நான்கு வருடங்களாகியும் இந்த ஆட்சியில் கூட எமது பாதை சீர்திருத்தம் செய்யப்படவில்லை.

அன்றாட போக்குவரத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் அவதியுறும் நிலையை கவனத்திற் கொண்டு இவ்வீதியை காலம் தாழ்த்தாது செப்பனிட்டு தரும்படி அரசாங்கத்தையும், நுவரெலியா மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணைவரையும் கேட்டுக்கொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.



--- Advertisment ---