சமூக நல்லிணக்கம் பற்றி வார்த்தைகளில் பேசாமல் செயலில் காட்டுங்கள்

பாறுக் ஷிஹான்


 சமூக நல்லிணக்கம் பற்றி வார்த்தைகளில் பேசாமல் செயலில் காட்டுங்கள் என  மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையில் 17 ஆம் மாதாந்த அமர்வு முதல்வர் சட்டத்தரணி றஹீப் தலைமையில் வியாழக்கிழமை (15.08.2019) நடைபெற்ற போது தேசிய காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

கல்முனை கடற்கரை பள்ளி வீதியானது 100% முஸ்லிம்கள் வாழுகின்ற வீதியாகும். அத்துடன் அந்த வீதி முஸ்லிம்களின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் இடமாகவும் இலங்கை அரசினால் முஸ்லிம்களின் தேசிய நிகழ்வாக அங்கீகாரம்பெற்ற கடற்கரை பள்ளிவாசல் அமைந்திருக்கின்ற அந்த வீதியை கடற்கரை பள்ளி வீதி என்று பெயர் சூட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது பிழையானது.

அது மாத்திரமில்லாமல் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த விடயத்தை காரணமாக வைத்து அரசியல் குளிர் காய்கின்றனர்.

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் தரவை பிள்ளையார் கோவிலின் பெயரை கல்முனை பிரதான வீதியை கடந்து கடற்கரைப் பக்கமாக 100% முஸ்லிம்கள் வாழுகின்ற வீதிக்கு எவ்வாறு தரவை பிள்ளையார் வீதி என்று பெயர் சூட்டுவது? வார்த்தைகளினால் நல்லிணக்கம் பேசுகின்ற நீங்கள் இந்த விடயத்திலாவது செயலினால் செய்து காட்டுங்கள்  உறுப்பினர்களைப் பார்த்து கேட்டுக்கொண்டார்


Advertisement