மொஹமட் நௌவர் அப்துல்லா,கைது

நௌவர் மௌலவியின் 16 வயதுடைய மகனான மொஹமட் நௌவர் அப்துல்லா அம்பாறையில் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் 2 ஆவது தலைவரான நௌவர் மௌலவியின் மகனான மொஹமட் நௌவர் அம்பாறை, புறநகர் பகுதியில் வைத்தே இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் நௌவர் குருநாகல், ஹெக்குணுகொல்ல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


--- Advertisment ---