மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் பலி

(க.கிஷாந்தன்)

கண்டி - நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் 24.08.2019 அன்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தொன்றில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி நகரிலிருந்து கொத்மலை புரட்டாசி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் குறித்த பகுதியில் வைத்து வேக கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஒன்றில் விழுந்து இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது

24.08.2019 அன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில், மோட்டர் சைக்கிளை செலுத்திய 20 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி கட்டுகஸ்தோட்டை ஜம்புகாபிட்டிய பகுதியை சேர்ந்த திலின சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement