அரசியல் வாழ்வில் அரைச் சதம்


பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa, சிங்களம்: පර්සි මහේන්ද්‍ර රාජපක්ෂ; பிறப்பு: 18 நவம்பர் 1945[1]), பொதுவாக மகிந்த ராசபக்ச (Mahinda Rajapaksa, மகிந்த ராஜபக்ச) என்பவர் இலங்கை அரசியல்வாதியும், தற்போதைய பிரதமரும் ஆவார். முன்னர் இவர் 2005 முதல் 2015 வரை 6 ஆவது இலங்கை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.

வழக்கறிஞரரான மகிந்த 1970 மே மாதம் 27ந் திகதி அரசியலில் கால் பதிக்கின்றார்.முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசுத்தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். 2010 அரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் தடவையாக 2010 சனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 சனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.[3]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இவர் பிரதமராக முடியவில்லை

2019 முதல் மீண்டும் இலங்கையின் பிரதமராகப் பணிபுரிகின்றார்.