விளக்கவுரை


பாறுக் ஷிஹான்  

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு   இளைஞர்களுக்கும் அரசாங்கசேவை உத்தியோகத்தர்களுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விளக்கவுரை நிகழ்வு கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் திங்கட்கிழமை(27)   காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

 இதன் போது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான  சர்வேதேச சமவாயங்கள் மற்றும் காணாமலாக்கப்படுதலுடன் தொடர்புடைய  சாட்சியங்களை பாதுகாக்கும் சட்ட மூலம் தொடர்பாகவும் காணாமலாக்கப்பட்டோருக்கு  சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் முறைமை தொடர்பாகவும்  இச் சான்றிதழின் முக்கியத்துவம் பற்றிய தெளிவும் இங்கு  விரிவுரைகளாக வழங்கப்பட்டன.

மேலும்  அரசினால் காணாமலாக்கப்பட்டோர் சான்றிதழினைபெற்றுக்கொள்வதற்கு எவ்வாறான ஒத்துழைப்புக்களை வழங்கமுடியும் என்பதுபற்றியும் இவ் செயல்முறையில் உள்ள சாதக பாத நிலமைகள் பற்றிய தெளிவினையும் இச்சான்றிதழினைபெற்றுக்கொள்வதற்கு மக்களிற்கு எவ்வாறான இலகுபடுத்தலினை மேற்கொள்ளமுடியும் என்பது பற்றியும் உதவி அரசாங்க அதிபர் டிம். லத்தீப்  விளங்க உரையினை நிகழ்த்தியிருந்தார்.

   இச் செயலமர்வின் மூலம் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவுகள்   இளைஞர்கள் இவ்விடயங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டதுடன் காணாமலாக்கப்பட்டோர் சான்றிதழைப் பெறுவதற்கான அரச உத்தியோகத்தர்களை ஒத்துழைப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் லத்தீப்  சமூகசேவைகள் உத்தியோகத்தர்கள் பிரதேசசெயலாளர்கள் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் உறுப்பினர்கள் 
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவத்தின் திட்டமுகாமையாளர் திரு.லவகுகராசா  திட்ட இணைப்பாளர்கள் அழகுராசா மதன் நவரெட்ணம் அஞ்சலிதேவி மற்றும் உத்தியோகத்தர்கள்
இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவின் அம்பாறைமாவட்ட இணைப்பாளர் ஏ.எல்   இஸ்ஸதீன் ஆகியோர். கலந்துகொண்டனர்