ஆப்கானிஸ்தான் கன்னி டெஸ்ட்டில் போட்டுத் தாக்கியது, பங்களாதேஷினை




பங்களாதேஷிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 224 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றுள்ளது.
பங்களாதேஷ் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமானது.
இதில் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 342 ஓட்டங்களையும், பங்களாதேஷ் அணி 205 ஓட்டங்களையும்எடுத்தன. 
137 ரன்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி மூன்றாவது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 237 ஓட்டங்களை எடுத்திருந்தது. 
நான்காவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து 260 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
இதன் மூலம் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 398 ஓட்ங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி 2 ஆவது இன்னிங்சை ஆடிய போது மூன்று முறை மழை குறுக்கிட்டது. 
அதன்படி  44.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 136 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, மழை பெய்ததாமையினால் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 
பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகிப் அல்-ஹசனும் 39 ஓட்டத்துடனும், சவும்யா சர்காரும் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான் 3 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந் நிலையில் இன்றைய இறுதி நாள் ஆட்டத்தின்போது பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 4 விக்கெட்டுக்கள் கையிலிருக்க 262 ஓட்டம் தேவைப்பட்டது. எனினும் 61.4 ஆவது ஓவரில் 173 ஓட்டங்களை மாத்திரமே அவர்களால் பெற முடிய அனைத்து விக்கெட்டுக்களும் பறிபோனது.
பங்களாதேஷ் அணி சார்பில் சத்மன் இஷ்லாம் 41 ஓட்டத்தையும், சஹிப் அல்ஹசன் 44 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற, ஏனைய வீரர்கள் அனைவரும் சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர். 
பந்து வீச்சில் ரஷித் கான் 6 விக்கெட்டுக்களையும், மொஹமட் நபி ஒரு விக்கெட்டினையும், சஹிர் கான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார். 
போட்டியின் ஆட்டநாயகனாக ரஷித் கான் தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தான் எதிர்கொண்ட மூன்றாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.