மிஸ்பா உல் ஹக் நியமனத்தை கிண்டல் அடித்த சோயிப் அக்தர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்ததால், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் நீக்கப்பட்டார். அதேபோல் தேர்வுக்குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்தார்.

இந்த இரண்டு பதவிகளும் மிஸ்பா உல் ஹக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மிஸ்பா உல் ஹக் உடன் இணைந்து விளையாடி சோயிப் அக்தர் விளையாட்டாக கிண்டல் அடித்துள்ளார்.


மிஸ்பா நியமனம் குறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் என இரண்டு பதவிகளையும் பெற்றுள்ள மிஸ்பா உல் ஹக்கிற்கு வாழ்த்துக்கள்.

மிஸ்பா உல் ஹக், சோயிப் அக்தர்

அவர் பாகிஸ்தான்  கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட வில்லை என்றால்தான் நான் ஆச்சர்யப்படுவேன். ஹாஹாஹாஹா. இதை நான் விளையாட்டாக சொல்கிறேன். கேப்டனாக எப்படி சிறப்பாக செயல்பட்டாரா? அதேபோல் தற்போதும் செயல்படுவார் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :
Pakistan Cricket Board | Misbah ul Haq | Shoaib Akhtar | பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு | மிஸ்பா உல் ஹக் | சோயிப் அக்தர்


--- Advertisment ---