மட்டக்களப்பில்,கிழக்கு கைத்தொழில் கண்காட்சி


( அப்துல் சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண கிராமிய தொழில்துறை திணைக்களத்தினால் நடத்தப்படும் கிழக்கு கைத்தொழில் கண்காட்சி (05)  கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு- கல்லடி  தொழில்துறை  திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் கைத்தொழில் கண்காட்சி இன்று 5ம் திகதியும் ஆறாம் திகதியும் ஏழாம் திகதியும் ஆகிய மூன்று தினங்களில் நடைபெற உள்ளதாக கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் துறை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கவிதா உதயகுமார் தெரிவித்தார்.

கிராமிய கைத்தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், கைத்தொழிலாளர்களுக்கு   பயிற்சி வழங்களும், அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே இக்கண்காட்சி இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கிழக்கு மாகாண தொழில்துறை திணைக்களத்தின்  26 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள விஷேட வடிவமைப்பு நிலையம் அமைப்பதற்கான கட்டிடத்துக்கான அடிக்கல்லிணையும் கிழக்கு மாகாண ஆளுநர் சான்றிதழ் டி சில்வா நாட்டி வைத்தார்.

அத்துடன் கிழக்கு கைத்தொழில் கண்காட்சிகான  ஆரம்ப நிகழ்வின் நாடா விலையும் இவர் இதன்போது வெட்டினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி. எம். எஸ். அபேகுணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண உள்ளுராட்சி மற்றும் கிராமிய தொழில் துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.