போரிஸ் ஜான்சனின் முயற்சியை தோற்கடித்த எம்பிக்கள்


ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் உடன்படிக்கை ஏற்படுவதை தடுக்க தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் வெற்றி பெற செய்ய பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முதல் கட்டத்தில் தோற்கடித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்த கோரும் இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற பொதுஅவையில் நடந்த வாக்குப்பதிவில் இதற்கு ஆதரவாக 328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்தன.
போரிஸ் ஜான்சனின் முயற்சியை தோற்கடித்த எம்பிக்கள்படத்தின் காப்புரிமைUK PARLIAMENT
இந்த வாக்குப்பதிவு பற்றி குறிப்பிட்டு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் பொதுத்தேர்தல் வழக்கத்தைவிட முன்னதாகவே நடத்திட வழிசெய்யும் மசோதாவை தான் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் நடப்பதற்குமுன் பிரெக்ஸிட் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பைன் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 21 எம்பிக்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து அரசின் முயற்சியை தோற்கடித்துள்ளனர்.
இந்த வாக்குப்பதிவுக்கு பிறகு, கட்சியின் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எம்பிக்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என்று அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரிஸ் ஜான்சனின் முயற்சியை தோற்கடித்த எம்பிக்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இதன்மூலம் அவர்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பர் என்று கூறப்படுகிறது.