முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் குடாஓயா பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 18.10.2019 அன்று மதியம் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 03 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடாஓயா பகுதியிலிருந்து அட்டன் நகர பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Advertisement