அடாது மழை பெய்டினும்,விடாது ஆடிய அரசியல்

கொட்டும் மழையிலும் ஜனாதிபதி சஜித் பிரமேதாசா அவர்களை ஆதரித்து, வினைத்திறன் மிக்க அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இக்றாஹ் வட்டாரத்தின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் இக்றாஹ் வட்டாரத்தின் அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு பின்னால் இடம்பெற்றது...!
இப் பிரச்சாரக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்...!
மேலும் இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் , கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, உயர் பீட உறுப்பினர்களான யூ.எல்.வாகிட், எஸ்.எல்.எம்.பழில் BA, மற்றும் முன்னாள் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜௌபர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான டீ. ஆப்தின், கே.முஹம்மட், மற்றும் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் போராளிகள், ஆதரவாளர்கள், இளைஞர்கள், என பலரும் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்தனர்...!
இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களினால் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கிம் அவர்களது வழிகாட்டலில் சஜித் பிரமேதாஷ அவர்களை ஆதரித்து அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் பிரதேசத்தில் பிரச்சார பணிகளை முடக்கி விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...


Advertisement